Saturday, March 3, 2007

வாஸ்து வளம் தந்ததா?

ககண்டி முனிவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர்தான் வாஸ்து புருஷன் என்று புராணப்புளுகு கூறுகிறது. வா°து புருஷன் கண்விழிக்கும் நேரம்தான் பூமிபூசைக்கு உத்தமமான நேரம் என்கின்றனர்! அதுவும் ஒன்றரை மணி நேரம்தான் கண் விழிப்பாராம்.

மாதம் 30 நாட்களில் (30 ஒ 24 = 720 மணி) 718ஙூ மணி நேரம் தூங்கிக் கழிக்கும் உலக மகாசோம்பேறி. இப்படிப்பட்ட சோம்பேறியை நினைத்து வழிபட்டு பூமிபூசை போட்டால் பூமிதான் விளங்குமா? வீடும் நாடும்தான் விளங்குமா?

தமிழக கட்டடக்கலை, சிற்பக்கலை மரபின் கருத்தாணையராகத் திகழ்பவர் திரு. கணபதி ஸ்தபதி அவர்கள். உலகம் வியக்கும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும், சென்னை வள்ளுவர் கோட்டமும் இவர் கைவண்ணத்தால் உருவானவையே. இவர் வாஸ்து பற்றிக் கூறும்போது, “எல்லாமே பொய், ஏமாற்று வேலை” என்கிறார்.வாஸ்துபடி கட்டிய கட்டடங்களில்தான், வளமும் செல்வமும் குவியும் என்ற கருத்துக்கு சான்று உண்டா? வாஸ்து சாஸ்திரம் உருவான காலத்திலாவது, இதிகாச காலங்களிலாவது சான்றுகள் உண்டா?

இதிகாச காலத்தில் வாழ்ந்த மாபெரும் கட்டடக் கலைஞர் மாயா என்பவர். அவர்-தான் அந்நாட்களில் வாஸ்துபடி அரண்-மனைகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டியவர். மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தில் அரண்மனை கட்டியவர் அவர்தான். பாண்டவர்களும், கவுரவர்களும் அமைதியாக, இன்பமாக வாழ்வதற்காக அரண்மனை கட்டினார். அரண்மனை கட்டி முடித்து பாண்டவர்கள் ஒரு மாதம் கூட அங்கு வாழவில்லை. வனவாசம் சென்றனர். கவுரவர்களும் குருசேத்திர யுத்தத்தில் அரண்-மனையில் வாழ்ந்த அத்தனை பெரியவர்களும் போரில் மாண்டு போனார்கள்.

வாஸ்துபடி மாயா கட்டிய மாளிகையில் பாண்டவர்களும் கவுரவர்களும் வாழ முடியவில்லை. அயோத்தி மாநகரமும் மாயா உருவாக்கியதுதான். அதில் ராமர் பட்டாபிசேகத்திற்கு என ஒரு மாளிகை கட்டினார். அந்த மாளிகையில் ராமர் ஒரு மணி நேரம் கூட தங்க முடியவில்லை. ராமருக்கு 14 வருடம் வனவாசம்தான் கிட்டியது.

மாயா மகள்தான் மண்டோதரி; ராவணன் மனைவி; அவளுக்கு மாயாதான் இலங்கையில் மாபெரும் அரண்மனை கட்டித் தந்தார். அந்த மாவீரன் இராவணனும் தோற்று மண்ணோடு மண் ஆனான்.ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் 2-வது முறையாக முதல்வராக ஆகிவிட எண்ணினார். முதல்வர் மாளிகைக்குச் செல்லும் பாதையை வாஸ்துபடி மாற்றி அமைத்தார். ரூ. 1 கோடி செலவு. ஒரு வாரத்திலேயே முதல்வர் பதவி பறிபோனது. பெங்களூரில் வாஸ்து மேதை பி.என்.ரெட்டி என்பவர் பல அடுக்கு மாளிகைகளை பல கோடி செலவில் கட்டி முடித்தார். திறப்பு விழா நடப்பதற்கு முன்பே அக்கட்டடம் தரை மட்டம் ஆனது.

இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் ஆன பின்பு, தொடர்ந்து பதவியில் நீடிக்க ஆசைப்பட்டார். வாஸ்து மேதை அறிவுரைப்படி வீட்டுப் படியை மாற்றி அமைத்தார். அடுத்த மாதமே அவருக்கு பிரதமர் பதவி பறிபோனது.

இன்றைய சமூகத்தின் முதுகெலும்பான உழைக்கும் மக்கள் எங்கு மனையிடம் இருக்கின்றதோ மனைப்பட்டா இலவசமாக கிடைக்கின்றதோ அங்கு இரவோடு இரவாகக் குடியேறுகின்றனர். வா°து பூசை போடாத-தால் யாரும் கெட்டழிந்து விடவில்லை.

இதிகாச காலம் தொட்டு இன்றுவரை வாஸ்துவை நம்பி கெட்டுப் போனவர்களின் பட்டியல் சொன்னால் அது விதிப் பயன் யாராலும் தடுக்க முடியாது என்கின்றனர். வாஸ்துவை விட விதி கர்மாதான் வலுவானது என்றால் வாஸ்துவை நாடி ஏன் போக வேண்டும்? வாஸ்துபடி பரிகாரம் காண முடியும் என்ற மாய்மாலம் பேசுவது ஏன்?

வாஸ்து வழிமுறைகள் நம்மை வாழ வைக்குமா? சோதிடர்களை மட்டுமே வாழ வைக்கும்.நல்ல காற்றோட்டம், நல்ல சூரிய வெளிச்சம், போதுமான தண்ணீர் வசதி, போதுமான கழிவு வெளியேற்றும் வசதி இவற்றிற்கு ஏற்ற வகையில் மனை அமைய வேண்டும்.

இன்றைய நகராட்சி, பேரூராட்சி கட்டட விதிகள் அனைத்தும் அறிவியல் முறை-யில் கட்டடங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்குகின்றனர். வீட்டுமனையில் மனையைச் சுற்றிலும் கால இடம் விட வேண்டும். முன்புறம் 10 அடி காலி இடம், பின்புறம் 15 அடி காலியிடம். இருபுறமும் 5 அடி காலியிடம். இப்படி அமைந்தால்தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை ஆகும்.

மக்களின் பயத்தையும், பலவீனத்தையும், மூடநம்பிக்கையையும், அறிவீனத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வாஸ்து மேதை-களால் சீரழிவது தனிமனிதர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயமே என்பதை நாம் புரிந்து அறிவியல் சார்ந்த பகுத்தறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.சமுதாய மாற்றத்தை விரும்பும் எவரும் சோதிட, தியான, வாஸ்து மயக்கங்களை தங்கள் மனத்திலிருந்து முதலில் அகற்றியாக வேண்டும். மக்கள் மனதிலிருந்தும் அகற்றிட முயன்றிட வேண்டும். இதைச் செய்தால் மாற்றங்கள் மலரும்.

0 comments: