Sunday, March 18, 2007

இந்தியாவைத் தோற்கடித்த கிருஷ்ணன்!!!

கிரிக்கெட் விளையாட்டுகளில் அவசியமே இல்லாமல் மதவெறியூட்டி வன்மத்தை வளர்த்து மதச்சண்டைகள் எக்காரணம் கொண்டும் ஓய்ந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நம்நாட்டு காவிக்கும்பல், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின்போது முஸ்லிம் ரசிகர்களுடன் வம்பு செய்வார்கள்.




இந்திய வீரர்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக பார்ப்பன புரோகிதர்கள் புதுப்புது பூசை புணஸ்கரங்களைச் செய்து மக்களை ஏமாற்றி ரசிகர்களிடமும் உண்டியல் குலுக்கி காசுபார்ப்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.



கிரிக்கெட் செய்திகளைத் தேடியதில் இன்னொரு வினோதமான செய்தியும் கண்ணில் பட்டது! பங்களாதேஷிலுள்ள இந்துக்கள், அந்நாட்டு அணி வெற்றிபெற வேண்டுமென்பதற்காக "Astitte Bangladesh" என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ண பரமாத்வுக்கு "Jagyo" பூசை செய்து பங்களாதேஷை வெற்றி பெறச் செய்ய ஆதரவு கேட்டிருக்கிறார்களாம்! மெளலவி பஜாரிலுள்ள காளி கோயிலில் முந்தாநாள் பூசைக்கு அனைவரையும் அழைத்துள்ளார்களாம்!

நேற்றிரவு நடந்த போட்டியில் கிருஷ்ணன், பங்களாதேஷிகளின் கோரிக்கையை ஏற்று இந்தியாவைத் தோற்கடித்து விட்டார். இந்தியர்களின் முதுகில் குத்திய நன்றி கெட்டத்துரோகி கிருஷ்ணனை என்ன செய்யலாம்?

செய்திக்கான சுட்டி : http://in.sports.yahoo.com/070316/43/6ddd4.html

Sunday, March 4, 2007

சமஸ்கிர்தமும் அறிவியலும்

பார்ப்பனர்களின் தேவபாஷையான சமஸ்கிர்தம் 1930 ஆம் ஆண்டுவரையில் இந்திய மருத்துவத் துறையில் சமஸ்கிர்தம் போதிக்கப்பட்டதாம்! கணினி மென்பொருள் எழுதுவதற்கேற்ற மொழி என்ற புரளியை ஒரு ஐரோப்பிய பத்திரிக்கை எழுதியதாகச் சொல்லி, பார்ப்பன சமஸ்கிர்த பாஷையை ஆஹா! ஓஹோ என்று சில வலைப்பூ அன்பர்கள் சிலாகித்து எழுதி வருகிறார்கள். ஆமாம்! அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?

பிராமணர்கள் எதையும் எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது என்று வாதிடுவது வழக்கம். ஆனால் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதில் முற்றாக மாறுபடுகின்றார்கள். சேது சமுத்திரத்திலுள்ள மணல் திட்டுகளை "குரங்குகள் கட்டிய பாலம்" என்று சொல்லவில்லையா! அதுபோலதான் சமஸ்கிர்த மொழியைப் பற்றிய புரட்டுகளும் என்பதைப் பார்ப்போம்.இதோ சில எடுத்துக்காட்டுகள்:

1) பூமி தட்டையானது
நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி கூறுகின்றது பூமி தட்டையானது. ஆனால் இன்று விஞ்ஞானம் ஐயத்திற்கிடமின்றி பூமி உருண்டையானது என்று நிரூபித்துள்ளது.

2) பூமி, சூரியன் - சந்திரன் இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளி தூரம்:
விஷ்னுபுராணம் கூறுகின்றது: சூரியன் 800,000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2,200,000 மைல்களுக்குப்பால் இருப்பதாகவும் கூறுகின்றது. ஆனால் விஞ்ஞானம், சந்திரன் தான் பூமிக்குப் பக்கத்தில் இருக்கின்றது என்றும் அதற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 240,000 மைல்கள் என்றும் சூரியன் 93,000,000 மைல்களுக்கப்பால் இருக்கின்றது என்றும் கண்டுபிடித்து நிரூபித்துள்ளது.

3) பூமியின் பரப்பளவு:
மார்கண்டேய புராணம் கூறுகின்றது: பூமியின் பரப்பளவு 4,000,000,000 சதுர மைல்கள். ஆனால் விஞ்ஞானம் அறுதி இட்டுக் கூறுகின்றது. பூமியின் பரப்பளவு 190,700,000 சதுர மைல்கள் மட்டுமே!

4) மாட்டுச்சாணம் - விபூதி:

வேதங்கள் கூறுகின்றன. பசு புனிதமானது. ஆகவே அது வணக்கத்திற்குரியது. பிராமணர்கள் இன்னொரு படி மேலே போய் மாட்டுச் சாணத்தில் எடுக்கப் படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் பிரஸ்தாபிக்கின்றனர். ஆனால் விஞ்ஞானம் இது அப்பட்டமான பொய் என்று நிரூபித்துள்ளது.

விபூதி பற்றி பேராசிரியர் கா.திருஞான சம்பந்தன் M.Sc., M.C.A.(www.geocities.com/shivaperumant) அவர்களின் கட்டுரையைப் படித்ததில் சில சுவாரசியமான சந்தேகங்கள் எழுந்தன.

1) திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்:

1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
3. தீட்டுக் கழிக்கும்.
4. உடலைச் சுத்தம் செய்யும்.
5. வியாதிகளைப் போக்கும்.
6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
7. முகத்திற்கு அழகைத் தரும்.
8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
9. புத்திக் கூர்மையைத் தரும்.
10. ஞானத்தை உண்டாக்கும்.
11. பாவத்தைப் போக்கும்.
12. பரக்தியைத் தரும்.

முந்தைய மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த விஞ்ஞானக் கழகம் மாட்டுச் சாணத்தின் சாம்பலை நன்றாக ஆராய்ந்து மாட்டுச் சாணத்திற்கு மருத்துவ குணம் இல்லை என்று அறிவித்துள்ளது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு நெற்றியில் ஏற்பட்ட ஒவ்வாமைக்கு மருத்துவர் கூறிய அறிவுரை, "விபூதி, பட்டை நாமம் இடுவதை தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தினார்.(அந்த மருத்துவர் பாகிஸ்தானிலிருந்தோ அல்லது சவ்தி அரபியாவிலிருந்தோ இதைச் சொல்லவில்லை!) இந்த விஞ்ஞான உண்மைகளை அறியாத பாமர்கள் தங்கள் இல்லங்களை மாட்டுச்சானத்தால் மெழுகியும் நெற்றியிலும் உடலிலும் மாட்டுச் சாணத்தைப் பூசிக் கொள்கின்றனர்.

2) கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது எனும் பேராசிரியர் சம்பந்தனின் கூற்றுக்கு எதிராக வட்நாட்டு சங்பரிவார சண்டாளர்கள் செந்நிற விபூதியையே நாமமாக இடுகின்றார்கள்.

3) விபூதி தரியாதவருடைய முகம் சுடுகாட்டுக்குச் சமமாகும்!

இது பார்ப்பனத் தனமான உளரலாகவே எனக்குப் படுகிறது. (பேராசிரியர் பார்ப்பனர் அல்ல) விபூதியிடாத பால்வடியும் குழந்தை முகம் சுடுகாடாகவா தெரிகிறது? ஐயர்களும் ஐயங்கார்களும் விபூதியிட்டுக் கொள்வதற்கு சமயக் காரணங்கள் இருக்கலாம். மாடுகளுக்கும் சிலைகளுக்கும் ஏன் விபூதியிட வேண்டும்?

இப்பொழுது புரிந்திருக்குமே கருஞ்சட்டைக்காரர்கள் ஏன் சமஸ்கிர்தத்தில் எழுதப்பட்ட புராணங்களையும், அவை போதித்த மூடவேதங்களையும் எதிர்க்கிறார்கள் என்று! அப்புறம் கணினி மென்பொருளாக்க மொழி பற்றி சில மாணவர்களிடம் விசாரித்ததில் சி,சி++,பேசிக் போன்ற மென்பொருளாக்க கணினி நிரலிமொழிகளை, பார்ப்பனர்கள் நாம் பயன்படுத்தும் மொழிகளுடன் குழப்பிக் கொண்டுள்ளதாகவே கருத்து தெரிவித்தார்கள்.

இல்லை இல்லை பார்ப்பன தேவபாஷையான சமஸ்கிர்தம் கணினி மொழிக்கேற்றது என்று வாதிடும் எவராவது ஒரு சிறிய சமஸ்கிர்த மென்பொருள் ??? எழுதலாமே!

இதுபற்றி கணினி மொழி வல்லுனர்கள் விளக்கினால் பயனாக இருக்கும்.
எது எப்படியோ "யாமறிந்த மொழிகளே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்பதையே என் கருத்தாக வைக்கிறேன்.

Saturday, March 3, 2007

வாஸ்து வளம் தந்ததா?

ககண்டி முனிவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர்தான் வாஸ்து புருஷன் என்று புராணப்புளுகு கூறுகிறது. வா°து புருஷன் கண்விழிக்கும் நேரம்தான் பூமிபூசைக்கு உத்தமமான நேரம் என்கின்றனர்! அதுவும் ஒன்றரை மணி நேரம்தான் கண் விழிப்பாராம்.

மாதம் 30 நாட்களில் (30 ஒ 24 = 720 மணி) 718ஙூ மணி நேரம் தூங்கிக் கழிக்கும் உலக மகாசோம்பேறி. இப்படிப்பட்ட சோம்பேறியை நினைத்து வழிபட்டு பூமிபூசை போட்டால் பூமிதான் விளங்குமா? வீடும் நாடும்தான் விளங்குமா?

தமிழக கட்டடக்கலை, சிற்பக்கலை மரபின் கருத்தாணையராகத் திகழ்பவர் திரு. கணபதி ஸ்தபதி அவர்கள். உலகம் வியக்கும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும், சென்னை வள்ளுவர் கோட்டமும் இவர் கைவண்ணத்தால் உருவானவையே. இவர் வாஸ்து பற்றிக் கூறும்போது, “எல்லாமே பொய், ஏமாற்று வேலை” என்கிறார்.வாஸ்துபடி கட்டிய கட்டடங்களில்தான், வளமும் செல்வமும் குவியும் என்ற கருத்துக்கு சான்று உண்டா? வாஸ்து சாஸ்திரம் உருவான காலத்திலாவது, இதிகாச காலங்களிலாவது சான்றுகள் உண்டா?

இதிகாச காலத்தில் வாழ்ந்த மாபெரும் கட்டடக் கலைஞர் மாயா என்பவர். அவர்-தான் அந்நாட்களில் வாஸ்துபடி அரண்-மனைகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டியவர். மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தில் அரண்மனை கட்டியவர் அவர்தான். பாண்டவர்களும், கவுரவர்களும் அமைதியாக, இன்பமாக வாழ்வதற்காக அரண்மனை கட்டினார். அரண்மனை கட்டி முடித்து பாண்டவர்கள் ஒரு மாதம் கூட அங்கு வாழவில்லை. வனவாசம் சென்றனர். கவுரவர்களும் குருசேத்திர யுத்தத்தில் அரண்-மனையில் வாழ்ந்த அத்தனை பெரியவர்களும் போரில் மாண்டு போனார்கள்.

வாஸ்துபடி மாயா கட்டிய மாளிகையில் பாண்டவர்களும் கவுரவர்களும் வாழ முடியவில்லை. அயோத்தி மாநகரமும் மாயா உருவாக்கியதுதான். அதில் ராமர் பட்டாபிசேகத்திற்கு என ஒரு மாளிகை கட்டினார். அந்த மாளிகையில் ராமர் ஒரு மணி நேரம் கூட தங்க முடியவில்லை. ராமருக்கு 14 வருடம் வனவாசம்தான் கிட்டியது.

மாயா மகள்தான் மண்டோதரி; ராவணன் மனைவி; அவளுக்கு மாயாதான் இலங்கையில் மாபெரும் அரண்மனை கட்டித் தந்தார். அந்த மாவீரன் இராவணனும் தோற்று மண்ணோடு மண் ஆனான்.ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் 2-வது முறையாக முதல்வராக ஆகிவிட எண்ணினார். முதல்வர் மாளிகைக்குச் செல்லும் பாதையை வாஸ்துபடி மாற்றி அமைத்தார். ரூ. 1 கோடி செலவு. ஒரு வாரத்திலேயே முதல்வர் பதவி பறிபோனது. பெங்களூரில் வாஸ்து மேதை பி.என்.ரெட்டி என்பவர் பல அடுக்கு மாளிகைகளை பல கோடி செலவில் கட்டி முடித்தார். திறப்பு விழா நடப்பதற்கு முன்பே அக்கட்டடம் தரை மட்டம் ஆனது.

இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் ஆன பின்பு, தொடர்ந்து பதவியில் நீடிக்க ஆசைப்பட்டார். வாஸ்து மேதை அறிவுரைப்படி வீட்டுப் படியை மாற்றி அமைத்தார். அடுத்த மாதமே அவருக்கு பிரதமர் பதவி பறிபோனது.

இன்றைய சமூகத்தின் முதுகெலும்பான உழைக்கும் மக்கள் எங்கு மனையிடம் இருக்கின்றதோ மனைப்பட்டா இலவசமாக கிடைக்கின்றதோ அங்கு இரவோடு இரவாகக் குடியேறுகின்றனர். வா°து பூசை போடாத-தால் யாரும் கெட்டழிந்து விடவில்லை.

இதிகாச காலம் தொட்டு இன்றுவரை வாஸ்துவை நம்பி கெட்டுப் போனவர்களின் பட்டியல் சொன்னால் அது விதிப் பயன் யாராலும் தடுக்க முடியாது என்கின்றனர். வாஸ்துவை விட விதி கர்மாதான் வலுவானது என்றால் வாஸ்துவை நாடி ஏன் போக வேண்டும்? வாஸ்துபடி பரிகாரம் காண முடியும் என்ற மாய்மாலம் பேசுவது ஏன்?

வாஸ்து வழிமுறைகள் நம்மை வாழ வைக்குமா? சோதிடர்களை மட்டுமே வாழ வைக்கும்.நல்ல காற்றோட்டம், நல்ல சூரிய வெளிச்சம், போதுமான தண்ணீர் வசதி, போதுமான கழிவு வெளியேற்றும் வசதி இவற்றிற்கு ஏற்ற வகையில் மனை அமைய வேண்டும்.

இன்றைய நகராட்சி, பேரூராட்சி கட்டட விதிகள் அனைத்தும் அறிவியல் முறை-யில் கட்டடங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்குகின்றனர். வீட்டுமனையில் மனையைச் சுற்றிலும் கால இடம் விட வேண்டும். முன்புறம் 10 அடி காலி இடம், பின்புறம் 15 அடி காலியிடம். இருபுறமும் 5 அடி காலியிடம். இப்படி அமைந்தால்தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை ஆகும்.

மக்களின் பயத்தையும், பலவீனத்தையும், மூடநம்பிக்கையையும், அறிவீனத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வாஸ்து மேதை-களால் சீரழிவது தனிமனிதர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயமே என்பதை நாம் புரிந்து அறிவியல் சார்ந்த பகுத்தறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.சமுதாய மாற்றத்தை விரும்பும் எவரும் சோதிட, தியான, வாஸ்து மயக்கங்களை தங்கள் மனத்திலிருந்து முதலில் அகற்றியாக வேண்டும். மக்கள் மனதிலிருந்தும் அகற்றிட முயன்றிட வேண்டும். இதைச் செய்தால் மாற்றங்கள் மலரும்.

Friday, March 2, 2007

வருமான வரியை கணக்கிட

வருமான வரியை கணக்கிடும் வசதி கொண்ட www.taxreach.net என்ற புதிய இணைய தளம் தொடங்கப் பட்டுள்ளது.

Taxreach.net என்ற முன்னணி வருமான வரி ஆலோசனை நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய இணைய தளத்தை, சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் வருமான வரித்துறை தலைமை ஆணையாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த இணையதளத்தின் மூலம் வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரியை துல்லியமாக கணக்கிட்டு வீட்டில் இருந்தவாறே வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம். மேலும் இதன் மூலம் கிடைக்க வேண்டிய வரி சலுகைகளை பெற முடியும். அத்துடன் வரிச்சுமையையும் குறைத்துக் கொள்ளலாம் என்று Taxreach.net நிறுவனத்தின் இயக்குனர் ராபின்மோசஸ் தெரிவித்தார்.

இது தவிர இலவச மாக வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவும், Taxreach.net வகை செய்கிறது. இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் தவிர்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த இணையதளத்தில் உள்ள வரி ஆலோசனைப் பகுதியில் வருமான வரி செலுத்துவோர் தங்களது சந்தேகங்கள் குறித்து இலவச ஆலோசனை பெற முடியும் என்றும் மோசஸ் குறிப்பிட்டார்.

அறிவுக்கு அறிமுகம்

தமிழ் வலையுலகில் கடந்த இரண்டுவருடங்களாக நீந்தி வருகிறேன். தமிழார்வத்தால் தமிழ் சார்ந்த பதிவுகளைப் படிப்பேன். சில சமயம் பின்னூட்டம் மட்டுமிட்டிருக்கிறேன்.

என் நண்பர்கள் மற்றும் மாணவர்களின் வற்புறுத்தலால் வலைப்பூ பதிக்க முயன்றுள்ளேன்.

என் கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது விமர்சிக்கப்பட விரும்பினால் சுயமுகவரியிட்ட மடலிடவும்.